Saturday, September 3, 2011

தொழுவிப்பதற்கு என்ன QUALIFICATION?

பள்ளிவாசல்களில் தொழுகை நடாத்துபவர்களுக்கு இருக்க வேண்டிய qualification என்ன என்பது வரையறை செய்யப்படாததால் உள்ள நடைமுறைச் சிக்கலை உதாரணமொன்றின் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இமாம்களாகப் பணி புரிபவர்கள் வெளியூரைச் சேர்ந்தவராக இருக்கும் சந்தர்ப்பங்களில், அவர்கள் விடுமுறைக்காக சென்று வரும் வரையில் யார் யாரோவெல்லாம் தொழுகை நடாத்துகின்ற நிலை எமதூரில் உள்ளது. பல வேளைகளில், குர்ஆனை தப்பு தப்பாக ஓதக் கூடியவர்கள் கூட தொழுகை நடத்துகிறார்கள். இவர்களின் பின்னால் குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்த பலர், அதிலும் மௌலவிமார்கள் கூட, மஃமூம்களாகத் தொழ வேண்டிய நிலை இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

"உங்களில் குர்ஆனை நன்றாக ஓதக் கூடியவரை தொழுகைக்கு இமாமாக நியமித்துக் கொள்ளுங்கள்" என்று தெளிவான கட்டளைகள் இருக்கும் போது, இந்த நிலை ஏன் இன்னும் தொடர்கிறது? ஏன், எமதூரில் ஒழுங்காக ஓதக் கூடியவர்கள் இல்லையா? அல்லது, ஓதக் கூடியவர்கள் ஜுப்பா அணியவில்லை என்பதனாலா? அப்படியும் இல்லையென்றால், 'எங்களுக்குத் தேவையானோரைத்தான் நாம் தெரிவு செய்வோம்' என்று நிருவாகிகள் இறுமாப்புடன் செயல் படுகிறார்களா?

பள்ளிவாசல் அல்லாஹ்வின் இல்லம். தொழுகை அவனுக்காக. மேலே சொன்ன கட்டளை கூட அவனது வழி காட்டலே. அப்படியிருக்க, தனி நபர்களின் விருப்பு, வெறுப்புகளுக்காக ஒரு பிரதான அமலை நாம் அலட்சியப் படுத்தலாமா?

ஊரான்

அஸ்ஸலாமு அலைக்கும்

கஹட்டோவிட்ட வாழ் பெருமக்களே, எமது ஊர் தொடர்பிலான உங்களது உளக் குமுறல்களை இங்கே நீங்கள் வெளியிடலாம். எந்தத் தடைகளும் இருக்க மாட்டாது. ஈமெயில் மூலமாக அல்லது கொமண்ட் மூலமாக  உங்கள் கருத்துக்கள் இங்கு இடம்பெற முடியும்.

மீண்டும் சொல்கிறோம், எவ்வித கட்டுப்படுகளும் கிடையாது.

நன்றி.